சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் - புதிய வேரியண்ட் அறிமுகம்!

சிட்ரான் நிறுவனம் புதிய சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.
Citroen C3 X Shine
சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன்
Published on
Updated on
1 min read

சிட்ரான் நிறுவனம் புதிய சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

சிட்ரான் சி3 எக்ஸ் ஷைனில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 82 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதேபோல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கும்.

இது அதிகபட்சமாக 110 எச்.பி பவரை வெளிப்படுத்தும். சி3 எக்ஸ் பேட்ச இடம் பெற்றுள்ளது. ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், கீலெஸ் என்ட்ரி உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

சி3 வரிசையில் டாப் வேரியண்டாக இது இருக்கும். இதன் ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ.7.91 லட்சம். எக்ஸ் ஷைனில் டர்போ மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.9.11 லட்சம் எனவும், ஆட்டோமேடிக் வேரியண்ட் சுமார் ரூ.9.9 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிஎன்ஜி கிட்டுக்கு சுமார் ரூ.93 ஆயிரம், 360 டிகிரி சூழலும் கேமரா பொருத்த சுமார் ரூ.25 ஆயிரம், டூயல் டோன் வண்ணத்துக்கு ரூ.15 ஆயிரம் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

Summary

Citroen C3 Shine X 1.2 Turbo is the petrol variant in the Citroen C3 lineup and is priced at Rs. 9.11 Lakh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com