
டொயோட்டா நிறுவனம், கேம்ரி கார் மாடலில் ஸ்பிரின்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
2024ஆம் ஆண்டில் டொயோட்டா கேட்ரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, கார் தயாரிப்பாளர் செடானில் சிறப்பு ஸ்பிரின்ட் பதிப்பைக் காட்சிப்படுத்தினார். இப்போது கேம்ரி ஸ்பிரின்ட் பதிப்பின் வடிவமைப்பு வழக்கமான மாடலைப் போல இருந்தாலும், முழு கருப்பு நிற பானட், டாப், டெயில்கேட், டெயில்கேடில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செடானை ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் காட்சிப்படுத்துகிறது. கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் கம்பீரமான தோற்றமுடைய முன் மற்றும் பின்புற பாடிகிட் ஆகியவை உள்ளன.
இது மட்டுமல்ல, கேம்ரி ஸ்பிரிண்ட் பதிப்பில் டோர் எச்சரிக்கை விளக்குகள், சுற்றுப்புற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, இது 5 வண்ணங்களில் வழங்கப்படுகிறது
எமோஷனல் ரெட், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், சிமென்ட் கிரே, ஃப்ரீஷியஸ் மெட்டல், டார்க் ப்ளூ மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
இதில் 2.5 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 187 எச்.பி பவரையும், 221 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 12.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 3 கிளைமேட் கண்ட்ரோல் ஏசி, 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெபிஎல் சவுண்ட் சிஸ்டம் உள்ளன.
ஷோரூம் விலை சுமார் ரூ. 48.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.