மெர்சிடெஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!

மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் புதிய கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Mercedes-AMG
மெர்சிடெஸ் பென்ஸ்
Published on
Updated on
1 min read

மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் ஏ.எம்.ஜி ஜிடி 63 மற்றும் ஜிடி 63 புரோ ஆகிய கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறப்பம்சங்கள் என்ன?

இது பரிணாம வளர்ச்சியுடன் கூடிய வடிவமைப்பைப் பெறுகிறது. எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், பெரிய ஏர் இன்டேக்குகள், ஸ்பாய்லர் மற்றும் ஸ்போர்ட் ரியர் டிஃப்பியூசர் உள்ளது.

மேலும் இரட்டை ஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், 3 ஸ்போக் ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீல் மற்றும் முன்புறத்தில் ஸ்போர்ட் இருக்கைகளும், பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 3 பாயின்ட் சீட் பெல்ட்களும் உள்ளன.

இந்த காரில் 4.0 லிட்டர் டிவின் டர்போ வி8 என்ஜின் இடம்பெற்றுள்ளது. ஏம்எம்ஜி ஜிடி 63யில் இந்த என்ஜின் 585 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும். ஜிடி.63 புரோவில் 612 பிஎச்பி பவரையும், 850 எம்என் டார்கையும் வெளிப்படும்.

9 ஸ்பீடு ஸ்பீடு ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.2 நொடிகளிலேயே எட்டிவிடும் என்றால் பாருங்கள்.

மெர்சிடெஸ் பென்ஸின் ஏ.எம்.ஜி ஜிடி 63 மற்றும் ஜிடி 63 புரோ ஆகிய கார்களை ஜூன் 27 முதல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரின் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

Mercedes-AMG GT 63 And GT 63 Pro Launched In India, Prices Start From Rs 3 Crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com