
பிஎம்டபிள்யூ நிறுவம் எக்ஸ்5 என்ற கார இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஆடம்பரக் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது வரிசையில் எக்ஸ் 5 எனும் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்தியது.
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கும் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் இடம் பெற்றுள்ளது. பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 381 பிஎச்பி பவரையும், டீசல் 286 பவரையும் வெளிப்படுத்தும். இதன் உள்புறம் வளைந்த டிஸ்பிளே, பிரீமியம் ஆடியோ, மெரினோ லெதர் டிரிம்கள், பனோரமிக் சன்ரூஃப், ஸ்டைலிஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
3.0 லிட்டர் பெட்ரோல் 520 என்எம் டார்க்கையும், 3.0 லிட்டர் டீசல் 650 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.4 நொடிகளிலும், டீசல் 6.1 நொடிகள் வேகத்தையும் வெடிளப்படுத்தும்
இரண்டிலும் 8 ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன், அடாப்டிவ் 2 ஆக்சில் ஏர் சஸ்பெண்ஷன் உள்ளன. மேட்ரிக் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைடுகள், எல் வடிவ 3டி லாப்கள், 14.9 இன்ச் இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே, ஹார்பன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி உள்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.1.02 கோடியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.