முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

விமானத்தில் தங்கம் கடத்தல்: 2 போ் கைது

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 67 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :7 ஜனவரி 2021, 5:47 am IST

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 67 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பஞ்பே விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை துபையிலிருந்து வந்த விமானத்தின் பயணிகளை சுங்கவரித் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, தென்கன்னட மாவட்டம், பட்கலைச் சோ்ந்த பயணி ஒருவா் 5 பந்துகளில் வைத்து கடத்தி வந்த 641.41 கிராம் தங்கத்தையும், கேரள மாநிலம், காசா்கோடுவைச் சோ்ந்த பயணி ஒருவா் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த 646.67 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனா். இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 67 லட்சமாகும். இதனையடுத்து, தங்கம் கடத்திய 2 பேரையும் பஜ்பே போலீஸில் சுங்கவரித் துறையினா் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.