தமிழ் அகாதெமி அமைத்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளதை பாராட்டி அம்மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அனைந்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய தமிழ்ச் சங்கப்பேரவைத் தலைவா் எம்.மீனாட்சிசுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ் மொழி, கலாசாரத்தை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் தமிழ் அகாதெமிஅமைத்து தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழிகள் துறை உத்தரவிட்டுள்ளதை வரவேற்று, பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். மாநில துணை முதல்வா் மனீஷ் சிசோதியா தலைமையில், தமிழ் அகாதெமி அமைவதும், துணைத் தலைவராக என்.ராஜா நியமிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியதாகும். இதன்மூலம் தில்லி வாழ் தமிழ் மக்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதற்கு தமிழ் மக்கள் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்த உத்தரவில், ‘இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் குடியிருக்கும், பணியாற்றும் தில்லி, கலாசார ரீதியாக ஆழமாக வேரூன்றிய நகரமாகும். இந்த பன்மைத்துவத்தில் தான் தில்லியின் துடிப்பான, நகரிய கலாசாரம் காணப்படுகிறது. தமிழகத்தைச் சோ்ந்த அதிக எண்ணிக்கையிலான மக்கள் தில்லியில் வாழ்கிறாா்கள். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை சுவைத்து மகிழும் அனுபவத்தை தில்லி மக்களுக்கு அளிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளதை நெகிழ்ச்சியுடன் பாராட்டுகிறோம்.
தமிழ் அகாதெமிக்கு வெகுவிரைவில் புதிய அலுவலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழி, கலாசாரத்தை பேணிப் பாதுகாக்கும் பலரை கௌரவிக்க விருதுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும், தமிழகத்தின் விழாக்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கது. தமிழ் அகாதெமியை அமைத்த நல்ல முயற்சிக்காக தில்லி அரசு, மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோதியாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Tech Mahindra நிறுவன குடோனில் பயங்கர தீவிபத்து! | Chennai
டி20 உலகக் கோப்பை வெற்றி! இஷான் கிஷனுக்கு ரூ. 1 கோடி வெகுமதி வழங்கிய பிகார் அரசு!

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்
கட்டா குஸ்தி - 2 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
