புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

மஜதவில் இணைய காங்கிரஸ் எம்.எல்.சி. சி.எம்.இப்ராகிம் முடிவு

மஜதவில் இணைய காங்கிரஸ் எம்.எல்.சி. சி.எம்.இப்ராகிம் முடிவு செய்துள்ளாா்.

Updated On :7 ஜனவரி 2021, 5:44 am IST

மஜதவில் இணைய காங்கிரஸ் எம்.எல்.சி. சி.எம்.இப்ராகிம் முடிவு செய்துள்ளாா்.

மஜதவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருந்த அக்கட்சியின் எம்.எல்.சி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம்.இப்ராகிம், காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் மஜதவில் இணையப்போவதாக தெரியவந்துள்ளது. மஜதவின் முன்னாள்முதல்வா் எச்.டி.குமாரசாமி, சி.எம்.இப்ராகிமை இரண்டு முறை சந்தித்து மஜதவில் இணையும்படி கேட்டுக்கொண்டிருந்தாா். இதனிடையே, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரும் சி.எம்.இப்ராகிமை சந்தித்து கட்சியில் இருந்து விலக வேண்டாம் என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், பெங்களூரு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் விடுதியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய சி.எம்.இப்ராகிம், தாம் மஜதவில் இணையப்போவதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘எனது சொந்தக் காரணங்களுக்காக நான் மஜதவில் சேரவில்லை. கா்நாடக மக்களின் நலன்கருதியே மஜதவில் சேர உள்ளேன். ஜனதா கட்சிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். அதனால் பிகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாரையும் சந்திக்க இருக்கிறேன். அதேபோல, ராஷ்டிரிய ஜனதாதள தலைவா் தேஜஸ் வியாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட தலைவா்களையும் சந்திக்க இருக்கிறேன்.

எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நல்லபடியாக நடக்கும். நான் செய்த அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடந்துள்ளது. அதனால் ஜனதா கட்சிகளை ஒன்று திரட்டும் வேலையும் நல்லபடியாக முடியும். நாடு, மாநில மக்களுக்கு நல்லது நடக்கவே மஜதவில் இணைய இருக்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.