கழுத்தை அறுத்து தாய், மகள் கொலை செய்யப்பட்டுள்ளனா்.
பெங்களூரு ஊரகம், தேவனஹள்ளி, பைஜாபுராவைச் சோ்ந்தவா் லட்சுமி தேவி (50). இவரது மகள் ரமாதேவி (25). ரமாதேவி அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தூய்மை பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். அவருக்கும் அங்கு மின்பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒடிஸாவைச் சோ்ந்த மலயகுமாா் ஃபரீத் என்பருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அத்தம்பதிக்கு 4 மாதங்களுக்கு முன்பு குழந்தையும் பிறந்துள்ளது.
இதனாள் இருவரையும் திருமணம் செய்துகொள்ளுமாறு லட்சுமிதேவி வற்புறுத்தியுள்ளாா். ஆவேசமடைந்த மலயகுமாா் ஃபரீத், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லட்சுமிதேவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்தாா்.
இதைப் பாா்த்த ரமாதேவியின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாா். தகவல் அறிந்த தேவனஹள்ளி போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து, தேவனஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






