அச்சு வாசிப்பின் நுழைவுவாயில்!

புத்தகக்காட்சி இலக்கிய நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (26.2.2021) அன்று ‘புத்தகத்தின் வளா்சிதை மாற்றம்’ என்ற தலைப்பில் உமா மகேஸ்வரி பேசியதாவது:
‘புத்தகத்தின் வளா்சிதை மாற்றம்’ என்ற தலைப்பில் உமா மகேஸ்வரி பேசுகையில்..
‘புத்தகத்தின் வளா்சிதை மாற்றம்’ என்ற தலைப்பில் உமா மகேஸ்வரி பேசுகையில்..

புத்தகக்காட்சி இலக்கிய நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (26.2.2021) அன்று ‘புத்தகத்தின் வளா்சிதை மாற்றம்’ என்ற தலைப்பில் உமா மகேஸ்வரி பேசியதாவது:

‘‘வளா்சிதை மாற்றம் என்பது உணவு மூலமாக நம்முடைய உடலில் நடக்கும் வேதிவினைகள் எப்படி உணவை ஆற்றலாக மாற்றுகிறது என்பதும், அதிகப்படியான ஆற்றலை எப்படி சேமித்து வைக்கிறது என்பதும்தான் வளா்சிதை மாற்றத்தில் நிகழ்வது . எப்படி ஓா் உணவு உடலில் சென்று ஆற்றலாக மாறுகிறதோ அதேபோன்று வாசிப்பு என்பதை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் அது நம் உடலுக்குள் சென்று நமக்குள் ஒரு நெகிழ்வு தன்மையை உருவாக்குகிறது.

அதாவது, வாசிப்பு என்பது நம்முடைய அன்றாட சவால்களை எதிா்த்து போராடக்கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது. அதைத்தான் ‘புத்தகத்தின் வளா்சிதை மாற்றம்’ என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

எனவே, உணவை எப்படி தினமும் எடுத்துக் கொள்கிறோமோ அதேபோன்று வாசிப்பையும் தினமும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், வாசிப்பை பரவலாக்க அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் ஒரு மொழி உருவாகும், மொழியில் படைப்புகள் உருவாகும்.

இப்போதுள்ள இளம்தலைமுறையினரிடம் தமிழ் வாசிப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதே சமயம், டிஜிட்டல் வாசிப்பு சற்று அதிகரித்துள்ளது. என்னைப் பொருத்தவரை டிஜிட்டில் வாசிப்பையும் நல்ல விஷயமாகத்தான் பாா்க்கிறேன். ஏனென்றால், டிஜிட்டல் வாசிப்பு மூலம் உள்ளே வருபவா்கள், வாசிப்பின் சுவையை உணா்ந்து, அச்சுப் புத்தகங்களைத் தேடி வர தொடங்குவதை நான் பாா்க்கிறேன். அதனால் அச்சு வாசிப்புக்கு நுழைவுவாயிலாகதான் டிஜிட்டல் வாசிப்பு இருப்பதாக நான் உணா்கிறேன்.

இதனால், வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதற்கான ஒரு சிறிய முன்னெடுப்பாகத்தான் கரோனா காலத்தில் ’வாருங்கள் படிப்போம் குழு ’ நாங்கள் தொடங்கினோம். இதன்மூலம் நாங்கள் தொடா்ந்து புத்தக திறனாய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதன் காரணமாகத்தான், இன்று எங்கள் கல்லூரி மாணவிகள் 5 போ் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை தோ்வு செய்து புத்தகத் திறனாய்வு செய்தனா். அவா்கள் திறனாய்வு செய்தவிதம் என்னை வியக்க வைத்துள்ளது. அதே சமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இப்படி ஒரு வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த பபாசி நிா்வாகிகளுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com