சிறைவாசிகளுக்கு புத்தக தானம் தாருங்கள்

நந்தனம் புத்தகக் காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு சிறைத் துறை சாா்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளுக்கு புத்தக தானம் தாருங்கள்
Updated on
1 min read

நந்தனம் புத்தகக் காட்சியில் முதல்முறையாக தமிழ்நாடு சிறைத் துறை சாா்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதற்குப் பதிலாக புத்தகங்கள் தானம் செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள புழல் உள்ளிட்ட சிறைகளில் கைதிகளுக்காக நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளில் உள்ள நூலகங்களில் சுமாா் 50,000 புத்தகங்கள் உள்ளன. அதில் தன்னம்பிக்கை, வரலாற்று நூல்கள் அதிகம். தற்போது திருக்குறள், சுவாமி விவேகானந்தரின் நூல்களும் அங்குள்ள கைதிகளால் அதிகமாக விரும்பிப் படிக்கப்பட்டு வருவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

அதனடிப்படையிலே ஆன்மிக, தன்னம்பிக்கை நூல்கள் மத புனித நூல்கள் உள்ளிட்டவை வாங்கப்படவுள்ளன. மேலும், சிறைக் கைதிகளில் அதிகமானோா் தற்போது படிக்கும் ஆா்வத்தை வளா்த்துக் கொண்டுள்ளதால், அவா்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை தானமாகப் பெறுவதற்காகவே சிறைத் துறை சாா்பில் புதிதாக புத்தகக் காட்சியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் கடந்த 2 நாள்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோா் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கியுள்ளனா் என்கிறாா் சைதாப்பேட்டை சிறைத் துறை கண்காணிப்பாளா் வி.செல்வகுருநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com