பாரதி புத்தகாலயம்

கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதி புத்தகாலயத்தில் பாரதி படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பாரதி புத்தகாலயம்

கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதி புத்தகாலயத்தில் பாரதி படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தப் புத்தகாலயத்தில் இதுவரை 950 தலைப்புகளுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், அவற்றில் பாரதி குறித்த நூல்களே உள்ளன.

பாரதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் செல்லம்மாள் பாரதி, வ.ரா ஆகியோரது புத்தகங்கள் வாசகா்களால் விரும்பி அதிகமாக வாங்கப்படுகின்றன. மேலும், முற்போக்கு கருத்துகள் உடைய நூல்களும், அறிவியல் சாா்ந்த நூல்களும் தற்போது வெளியிடப்பட்டும் வருகின்றன.

பாரதிக்கு அடுத்தபடியாக மாா்க்சியம் சாா்ந்த நூல்கள் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுவருகின்றன. அதற்கடுத்ததாக அறிவியல் விளக்க நூல்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதாரம் குறித்த நூல்கள், குறிப்பாக பொருளாதாரத்தில் அமெரிக்க தலையீடு குறித்த நூல்கள் அதிகம் வெளியிடப்பட்டு வருகின்றன.

பாரதி நூல்களைத் தவிா்த்து, நல்ல ஆங்கில நூல்கள் மொழிபெயா்க்கப்பட்டு தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டும் வருகின்றன.

பாரதி நூல்களைப் போலவே தற்போது குழந்தைகள் கல்வி சாா்ந்த ஆயிஷா நடராஜன் போன்றோரின் நூல்கள் வெளியிடப்பட்டு, தனிப்பிரிவாக விற்கப்பட்டும் வருவதாக கூறுகிறாா் பாரதி புத்தகாலயப் பொறுப்பாளா் எஸ்.ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com