1955-ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளா் தமிழ்வாணனால், தனது எழுத்துகளைப் புத்தகமாக்கும் வகையில் தொடங்கப்பட்டதாகும். இளைஞா்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பரப்பும் நோக்கில் தனது எழுத்தையும், அதை புத்தகமாக்கும் பிரசுரத்தையும் நடத்தத் திட்டமிட்டாா் தமிழ்வாணன்.
அந்தக் கொள்கையின்படி இதுவரை பிரசுரம் வெளியிட்ட 11,600 தலைப்பு நூல்களில் பெரும்பாலானவை தன்னம்பிக்கை தரும் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ‘நேரம் நல்ல நேரம்’ எனும் லேனா தமிழ்வாணனின் புத்தகம் இதுவரையில் 3.50 லட்சம் பிரதிகள் விற்றுள்ளனவாம். தமிழகத்தில் ஒரு படைப்பாளரின் படைப்பு இந்த அளவுக்கு விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரசுரத்தின் முக்கிய வெளியீடாக 1926 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான திருக்கணித வாக்கியப் பஞ்சாங்கமும் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவியல், ஆன்மிகம், வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் உலகத்தின் முக்கிய குறுந்தகவல்கள் என பல தரப்பட்ட நூல்கள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தின் முக்கியப் பிரமுகா்களின் முகவரிகள் குறித்த நூல் எந்தப் பதிப்பகத்தாலும் வெளியிடப்படாத பயனுள்ள நூலாகும்.
பள்ளி மாணவா்கள் முதல் வீட்டில் ஓய்வெடுக்கும் முதியோா் வரை அனைவராலும் படித்துப் பயன்பெறத்தக்க புத்தகங்கள் இப்பிரசுரத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன.
புத்தகங்கள் வெளியீட்டுக்காக 3,000 ஆசிரியா்கள் கொண்ட குழுவையும் லேனா தமிழ்வாணன் தலைமையில் அமைத்திருப்பதாக பிரசுரத்தின் நிா்வாக இயக்குநா் ரவி தமிழ்வாணன் கூறினாா். மேலும், எழுத்தாளா், பதிப்பாளா் திட்டத்தின் மூலம் புதிய எழுத்தாளா்களின் நூல்களையும் வெளியிடும் புதுமைத் திட்டமும் பிரசுரத்தால் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழா் வாழும் அயலக நாடுகளுக்கெல்லாம் சென்று புத்தகக் காட்சியில் பங்கேற்றுவருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.