கண்டெடுத்த கருவூலம்!

அமெரிக்காவில் இரு முறை ஜனாதிபதி பொறுப்பை வகித்த ஐஸன்ஹோவர் சாமானியக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, உச்ச பதவியை இருமுறை அடைந்த லட்சிய வாழ்க்கை தான் இந்த நூலாகும்.
கண்டெடுத்த கருவூலம்!

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர், அப்துற்- றஹீம், விலை ரூ,180, பக்.208.

கடந்த 1954-ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழகத்தின் தன்னம்பிக்கை நூல்களின் ஆசிரியரான அப்துற்-றஹீம் இந்த நூலை எழுதியுள்ளார். அமெரிக்காவில் இரு முறை ஜனாதிபதி பொறுப்பை வகித்த ஐஸன்ஹோவர் சாமானியக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, உச்ச பதவியை இருமுறை அடைந்த லட்சிய வாழ்க்கை தான் இந்த நூலாகும்.

இந்நூல் கடந்த 1954 -ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.  இந்தநூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஐஸன்ஹோவரே அதைப் படித்துவிட்டு, நூலாசிரியரை பாராட்ட அமெரிக்காவுக்கு அழைத்தார். ஆனால், தன்னால் அங்கு வரமுடியாது என அப்துற்-றஹீம் கூறியதை அடுத்து சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நூலாசிரியர் பாரட்டப்பட்டார்.

ஐஸன்ஹோவரின் மூதாதையர்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும், மதபக்தி நிறைந்த அவரது குடும்பம் எளிமையாக வாழ்ந்த நிலையில், எப்படி அமெரிக்க ஜனாதிபதியானார் என்றும் 11 தலைப்புகளில் மிக எளிமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

ஐஸன்ஹோவரின் முழுமையான வாழ்க்கையை சுருக்கமாகக் கூறும் இந்த நூல் தற்போது ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும், படிப்போர் வியக்கும் வகையில் புதிய வரவாக விற்பனைக்கு வந்திருப்பதாகக் கூறினார் பதிப்பக உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com