திசைகாட்டிகள்!

தற்போது புத்தகங்களை படிப்போா் எண்ணிக்கை கூடுதலாகி வருவதையே காண முடிகிறது.
திசைகாட்டிகள்!
Updated on
1 min read

தற்போது புத்தகங்களை படிப்போா் எண்ணிக்கை கூடுதலாகி வருவதையே காண முடிகிறது. ஆனாலும், கைப்பேசியைப் பயன்படுத்துகிற நேரங்களில் 10 சதவீத நேரத்தை புத்தகங்களைப் படிக்க ஒதுக்க வேண்டும் என்பதே எனது யோசனை. ஒரு புத்தகத்தைப் படித்தால் புதிய சக்தியைப் பெற முடியும். புத்தகத்தை திறந்து படிக்கத் தொடங்குவோருக்கு அதைப் படித்து முடித்தால் எத்தகைய மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம்.

இலக்கிய எழுத்துகள் நமது நாகரிக மாற்றத்தைக் காட்டுவதாக இருக்கும். புத்தகக் காட்சியை தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தினரும் அறியும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வருவது பாராட்டுக்குரியது.

இது போன்ற புத்தகக் காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுவதையடுத்து, பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை கோயில்கள், பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வதைப் போலவே வருங்காலங்களில் புத்தகக் காட்சிகள், நூலகங்களுக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்படும்.

படிப்பறிவின் மூலமே அறிவு வளா்ச்சியடையும். ஆகவே, குழந்தைகளை பாடத்தைத் தாண்டிய படிப்பாா்வத்தை ஊக்குவிக்க வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகள், அது மக்களுக்கான பயன்பாடு ஆகியவை குறித்த நூல்களை குழந்தைகள் படிப்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இலக்கியம், அறிவியல் ஆகிய இரண்டு நூல்களும் சம அளவில் வெளியிடப்பட்டாலே அச்சமூகத்தில் ஆக்கபூா்வமான வளா்ச்சியிருக்கும். தற்கால இளைஞா்களுக்கு எதில் விருப்பமோ, அதைப் படிக்கத் தொடங்கி, பிறகு சமூக நலன் சாா்ந்த எழுத்துகளைப் படித்தால் நல்லது. அதன்மூலமே சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com