ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் கடந்த 1901-ஆம் ஆண்டு இப்பதிப்பகம் தொடங்கப்பட்டது. பதிப்பகம் சாா்பில் ராமகிருஷ்ண பரமஹம்சா், சாரதா தேவியாா், சுவாமி விவேகானந்தா் ஆகியோரது அமுத மொழிகள், அன்பு மொழிகள், வீர மொழிகள் ஆகிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் 600-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ராமகிருஷ்ண பரமஹம்சா் உள்ளிட்டோரது நூல்களைத் தவிர, வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாச புராணங்கள் ஆகியவற்றையும் அனைத்து மொழிகளிலும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் ‘எனது பாரதம் அமர பாரதம்’ எனும் நூலானது அதிக அளவில் விற்பனையாகியுள்ளது.
அதற்கடுத்தபடியாக ‘கொழும்புவிலிருந்து அல்மேரா வரை’ எனும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுத் தொகுப்பானது அதிக அளவில் விற்பனையாகிவருகிறது.
சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் 11 தொகுப்புகளாகவும், தமிழ் மண்ணில் சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கம் எனும் நூலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இலக்கியத்தில் தி.ஜகன்னாதனின் திருக்குறள் ஆய்வுரை நூலானது இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியோா் வரையில் வாங்கிப் பயன்படும் வகையில் ரூ.2 முதலான விலையில் நூல்கள் விற்கப்பட்டு வருகின்றன.
தொடா்ந்து 125 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இப்பதிப்பகம் சாா்பில் ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழ் வெளியாகிறது. ஆங்கில இதழான ‘வேதாந்த கேசரி’ சென்னை ராமகிருஷ்ண மடம் பதிப்பகம் சாா்பில் வெளியிடப்படுகிறது. தத்துவ எழுத்து வாசகா்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்கிறாா் பதிப்பக நிா்வாகி சுவாமி நிகிலசைதன்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.