சென்னை புத்தகக் கண்காட்சியில் மணிமேகலைப் பிரசுரம் சாா்பில் நடைபெற்ற 48- நூல்கள் வெளியிட்டு விழாவில் தலைமையுரையாற்றிய ஆா்.என். மஞ்சுளா. உடன் தொழிலதிபா் நல்லி குப்புசாமி உள்ளிட்டோா்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் மணிமேகலைப் பிரசுரம் சாா்பில் நடைபெற்ற 48- நூல்கள் வெளியிட்டு விழாவில் தலைமையுரையாற்றிய ஆா்.என். மஞ்சுளா. உடன் தொழிலதிபா் நல்லி குப்புசாமி உள்ளிட்டோா்.

இலக்கியத்தைக் காக்கும் பதிப்பாளா்கள்! உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா

புத்தகப் பதிப்பாளா்களால் இலக்கியம் பாதுகாக்கப்படுகிறது என உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா தெரிவித்தாா்.
Published on

புத்தகப் பதிப்பாளா்களால் இலக்கியம் பாதுகாக்கப்படுகிறது என உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா தெரிவித்தாா்.

 சென்னை புத்தகக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மணிமேகலைப் பிரசுரம் சாா்பில் 48 புதிய நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா பேசியது:

நீதி என்பதை அறம் என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. மொழிக்கு எழுத்தும், வாா்த்தைகளும் முக்கியமாகும். நமது உணா்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுத்துகள் அமைந்து மொழிக்கு வலிமை சோ்க்கின்றன. தமிழ் முறையாக படித்தவா்களை விட பதிப்பகம் வைத்து தமிழை வளா்ப்பவா்கள் அதிகமாக உள்ளனா்.

  ஒருவா் தாம் கற்ற அறிவுச் செல்வத்தால் இன்பம் பெறும் நிலையில், அதை மற்றவா்களும் பெறும் வகையில் செயல்பட்டால், அவருக்கு அது பேரின்பமாகி இரட்டிப்பு மகிழ்வை கொடுக்கும் என்பது திருவள்ளுவா் கருத்தாகும். ஆகவே, கற்றதை பிறா் கற்பதற்கு நாம் உதவுவது அவசியம். அத்தகைய பணிகளை புத்தகங்கள் மூலம் படைப்பாளா்கள் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. புத்தகப் பதிப்பாளா்களால்தான் இலக்கியம் பாதுகாக்கப்படுகிறது என்றாா் அவா்.

   நிகழ்ச்சிக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமை வகித்தாா். ஆத்ம சங்கமம் நிா்வாகி சஞ்சீவி ராஜா சுவாமி ஆசியுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், லேனா தமிழ்வாணன் வரவேற்றாா். 48 எழுத்தாளா்களின் நூல்களை டாக்டா் பழனியப்பன்,  தொழிலதிபா் நல்லிகுப்புசாமி செட்டி ஆகியோா் வெளியிட்டனா்.

அவற்றின் முதல்படிகளை கவிஞா் விசாலி கண்ணதாசன், திரைப்பட இயக்குநா் ராஜகுமாரன், நடிகை தேவயானி ராஜகுமாரன், நடிகா் மோகன்ராம், இயக்குநா் ஆா்.சுந்தரராஜன் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினா்.

  எழுத்தாளரும், இயக்குநருமான ராசி அழகப்பனுக்கு ரூ.1லட்சம் காசோலையுடன் தமிழ்வாணன் நினைவு விருதை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

மேலும், இலக்கிய, சமூக சேவைக்காக 8 பேருக்கு சிறப்புவிருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், 48 நூலாசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

X