

பதிப்பகத் துறையில் கடந்த 42 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டுவரும் இந்தப் பதிப்பகத்தின் முக்கிய வெளியீடுகள் விவரம்: கல்கியின் "தியாகபூமி', "மகுடபதி', "மோகினித் தீவு', கவிஞர் வாலியின் "எனக்குள் எம்.ஜி.ஆர்.', "வாலி 1000', "வாரந்தோறும் வாலி', கவிஞர் முத்துலிங்கத்தின் "பாடல் பிறந்த கதை', திருநாவுக்கரசு ஐபிஎஸ் எழுதிய "உன்னுள் யுத்தம் செய்', "காக்கிச் சட்டை அப்பா', நெல்லை கவிநேசனின் 19 பதிப்புகள் கண்ட "உலக உத்தமர் கலாம்', ஜீவபாரதியின் 31 பதிப்புகள் கண்ட "வீரபாண்டிய கட்டபொம்மன்', அவரின் 17 பதிப்புகள் கண்ட "வேலுநாச்சியார்' மற்றும் மெர்வினின் "முயற்சியே முன்னேற்றம்' உள்ளிட்ட வாழ்வியல் முன்னேற்ற நூல்கள், அரசியல் பிரமுகர் எஸ்.கே.கார்வேந்தனின் நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளாக கவிதாசனின் "உயர்தனிச் செம்மொழி', "கருணாநிதியின் திருக்குறள் உரை', ஜெ.கமலநாதனின் "மேன்மக்கள்', சுந்தர ஆவுடையப்பனின் "வாழ்க்கை நமக்கே', மருத்துவர் வா.ஜெயபாலனின் "அமுதே தமிழே', வெற்றிச் செல்வனின் "இந்திய தண்டனைச் சட்டம்' உள்ளிட்ட நூல்களும் வெளியிடப்பட்டு வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்கிறார் பபாசி செயலரும், குமரன் பதிப்பக உரிமையாளருமான எஸ்.வயிரவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.