சென்னை, ஏப்.26: தமிழகத்தைச் சேர்ந்த சர்வலட்சுமி பேப்பர் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைக்காக பொதுப் பங்குகளை வெளியிடுகிறது. பங்கு வெளியீடு குறித்து நிறுவனத்தின் தலைவர் ராமசாமி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
காகித நிறுவனங்களுக்குத் தேவையான இயந்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட செர்வால் குழுமம் இப்போது காகித ஆலையை திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூரில் 340 ஏக்கரில் அமைத்துள்ளது. இந்த ஆலை நாளொன்றுக்கு 300 டன் காகித உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். தடையற்ற மின்சாரத்துக்காக 15 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையத்தையும் இந்நிறுவனம் அமைத்துள்ளது. முதல் கட்ட முதலீட்டில் நிறுவனம் ரூ. 280 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் மேலும் ரூ. 60 கோடி தேவைப்படுகிறது. இதற்காக பொதுப் பங்குகள் வெளியிடப்படுகின்றன. ரூ. 10 முக மதிப்புள்ள இப்பங்கின் உயர் மதிப்பு ரூ. 27 முதல் ரூ. 29 வரை இருக்கும். பங்கு விற்பனை ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடைவதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.