முத்தூட் நிதி நிறுவனத்தில் தனி நபர் கடன் வசதி அறிமுகம்

தங்கம் மீதான கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள முத்தூட் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தற்போது தனிநபர் கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
முத்தூட் நிதி நிறுவனத்தில் தனி நபர் கடன் வசதி அறிமுகம்
Updated on
1 min read

தங்கம் மீதான கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள முத்தூட் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தற்போது தனிநபர் கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
 இது குறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர்கள் ஜார்ஜ் எம்.அலெக்ஸாண்டர், ஜார்ஜ் எம்.ஜேக்கப் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: தனி நபர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை ஏற்கெனவே பெங்களூரு, கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டோம். அதன் மூலம் தற்போது சுமார் 3,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
 இந்த வசதியை தற்போது சென்னையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் 60 கிளைகளிலும் அறிமுகப்படுத்துகிறோம். இதைத் தொடர்ந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் அடுத்த 10 நாள்களுக்குள் தனிநபர் கடன் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
 சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வசித்தால் ரூ.20 ஆயிரம் (நிகர ஊதியம்) அல்லது அதற்கு மேல் மாத ஊதியமும், நகரங்களில் வசிக்கும் தனிநபர் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் சம்பளமும் பெறுபவர்கள் தனி நபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
 குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதைத் திரும்பச் செலுத்தும் காலம் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 தனி நபர் கடனுக்கு அரசு, தனியார் துறையில் வங்கிக் கணக்கின் மூலம் மாத ஊதியம் பெறுபவராக இருக்க வேண்டும். ஊதிய பட்டியல், ஆதார் அட்டை உள்பட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த மூன்று நாள்களுக்குள் கடனுதவி கிடைக்கும். இதற்கான வட்டி வீதம் 14 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை இருக்கும். நடப்பு நிதியாண்டுக்குள் தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு தனிநபர் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com