ரூ.4,428 கோடியாக அதிகரித்தது சோழா எம்எஸ்ஸின் பிரீமியம் வருவாய்

சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பிரிமியம் வருவாய், 2018-19-ஆவது நிதியாண்டில் ரூ.4,428 கோடியாக அதிகரித்துள்ளது.
ரூ.4,428 கோடியாக அதிகரித்தது சோழா எம்எஸ்ஸின் பிரீமியம் வருவாய்

சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பிரிமியம் வருவாய், 2018-19-ஆவது நிதியாண்டில் ரூ.4,428 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மொத்த பிரியம் வருவாயாக ரூ.4,428 கோடியை ஈட்டியுள்ளது.
இது, முந்தைய நிதியாண்டைவிட 8 சதவீதம் அதிகம் ஆகும்.
அத்துடன், கடந்த நிதியாண்டுக்கான பொதுக் காப்பீட்டுச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு 3 சதவீதமாக உள்ளது. அதன் மூலம், விவசாயம், குழு மற்றும் அரசு மருத்துவக் காப்பீட்டுச் சந்தையைத் தவிர்த்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 6-ஆவது இடத்தை சோழமண்டலம் எம்எஸ் வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com