
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வைக் கண்டது.
ரிசர்வ் வங்கி ரூ.1.76 லட்சம் கோடி ஈவுத் தொகையை மத்திய அரசுக்கு தர முடிவு செய்துள்ளது. இது அரசின் நிதி கையிருப்பு புத்துயிரூட்டும் நடவடிக்கையாக கருதப்பட்டதையடுத்து, அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது. அதன் காரணமாக ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 54 காசுகள் உயர்ந்து 71.48-ஐ எட்டியது. 2019-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதியிலிருந்து ரூபாய் மதிப்பு ஒரே நாளில் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை என அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G