ஜேகே டயர் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்: சாம்பியன் கோப்பைகளை வென்ற டுகாட்டி

உயர்தர மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் டுகாட்டி நிறுவனம் தனது க்ரீடத்தில் மற்றொரு மாணிக்கத்தை சேர்த்துக் கொண்டுள்ளது.
ஜேகே டயர் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்: சாம்பியன் கோப்பைகளை வென்ற டுகாட்டி

உயர்தர மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் டுகாட்டி நிறுவனம் தனது க்ரீடத்தில் மற்றொரு மாணிக்கத்தை சேர்த்துக் கொண்டுள்ளது.

நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற ஜேகே டையர்  FMSCI இந்தியன் தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் 2019 போட்டியில் டுகாட்டி நிறுவனம், சூப்பர்பைக் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சூப்பர்பைக் பிரிவில் பங்கேற்ற டுகாட்டி இந்திய வீரார்களான ரஜினி கிருஷ்ணன் மற்றும் திலிப் லல்வானி ஆகியோர் டுகாட்டி பனிகாலே வி4 எஸ் பைக்கில் பந்தயத்தில் பங்கேற்று முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றனர். 

அதோடு, இந்தியாவில் 1000 சிசி பிரிவில் பங்கேற்கும் ஒரே ஒரு வீராங்கனையான நெஹரிகா யாதவ் இந்த பந்தயத்தில் தனது 899 பெனிகாலே பைக்கில் பங்கேற்றார்.

இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 11 டுகாட்டி சூப்பர் பைக்குகள் இடம்பெற்றதன் மூலம், சூப்பர் பைக்குகள் தயாரிப்பில் டுகாட்டி முன்னிலை வகிக்கிறது. 

அதுமட்டுமல்லாமல், டுகாட்டி இந்திய டீலர் பார்ட்னர் அணியின் அதிகாரப்பூர்வ பைலட்டான பூமிக் லல்வானி, டுகாட்டி பனிகலே வி4 எஸ் போட்டியின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

மேலும், பி1 மற்றும் பி4 போட்டிகளிலும் அவர் முதல் இடத்திலும், திலிப் லல்வானி 2ம் இடத்திலும் வெற்றி பெற்றனர்.

டுகாட்டி இந்தியா அணிக்காக போட்டிகளில் பங்கேற்கும் திலிப் லல்வானி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பனிகாலே வி4 மோட்டார் சைக்கிள் 4 சிலிண்டர் எஞ்ஜின்களுடன்  வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடாலே எஞ்சின் 1,103சிஎம்3 90 டிகிரி வி4 மற்றும் டெஸ்மோடிரோமிக் டைமிங், 214 எச்பி - 13 ஆர்பிஎம் ஆகியவை பனிகாலே வி4ஐ அதிகத் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் முன்னிலை வகிக்க வைக்கிறது. டுகாட்டி பாரம்பரியத்தில் புதிய துவக்கத்தை இந்த பைக் ஏற்படுத்தியது. 

இது பற்றி டுகாட்டி இந்தியாவின் மேலாண் இயக்குநர் செர்கி கானோவாஸ் கூறுகையில், ஜேஜே டையர் தேசிய பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற எங்களது வீரர்களின் திறமையால் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது மிகப்பெரிய பந்தயம் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் நடைபெறும் மிகச் சிறந்த போட்டியாகவும் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க சிறந்த பைக்கான பனிகாலே வி4ஐ தேர்வு செய்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் வளர்ந்து வரும் மோட்டார்பந்தய வீரர்களுடன் நேரடியாக அளவளாவுவதில் தனிப்பட்ட முறையில் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் நிச்சயம் அதிகக் கோப்பைகளை வெல்வோம் என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேகே டையர் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜேகே ரேஸிங் இந்தியா தொடர்தான் ப்ரீமியம் பிரிவாக உள்ளது. 1997ம் ஆண்டு துவக்கப்பட்ட ஜேகே டயர், வளர்ந்து வரும் பந்தய வீரர்களுக்கான சிறந்த பந்தய தளமாக மாறி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com