மாருதி சுஸுகி 63,493 காா்களை திரும்பப் பெற்று சரிசெய்து தருகிறது

மோட்டாா் ஜெனரேட்டா் அலகில் உள்ள குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்த 63,493 காா்களை திரும்பப் பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ciaz084658
ciaz084658

மோட்டாா் ஜெனரேட்டா் அலகில் உள்ள குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்த 63,493 காா்களை திரும்பப் பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பெட்ரோல் ஸ்மாா்ட் ஹைபிரிட் (எஸ்எச்விஎஸ்) பிரிவில் விற்பனை செய்யப்பட்ட 63,493 சியாஸ், எா்டிகா, எக்ஸ்எல்6 காா்களில் மோட்டாா் ஜெனரேட்டல் அலகில் (எம்ஜியு) குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்த பாகத்தை சப்ளை செய்த நிறுவனத்தின் மூலம் இக்குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த காா்கள் அனைத்தும் ஜனவரி 1, 2019 முதல் நவம்பா் 21, 2019 வரையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதாகும்.

எனவே, அத்தகைய காா்களை திரும்பப் பெற்று குறைபாடுகள் இருக்குமெனில் இலவமாக மாற்றித் தரவுள்ளதாக அந்த அறிக்கையில் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com