சுடச்சுட

  
  tvs


  டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 6 சதவீதம் அதிகரித்தது. 
  இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  டிவிஎஸ் மோட்டார் சென்ற டிசம்பர் மாதத்தில் 2,71,395 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2017 டிசம்பரில் விற்பனையான 2,56,870 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும்.
  மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,47,591 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,58,709-ஆக இருந்தது. உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 2,07,739-லிருந்து 1 சதவீதம் உயர்ந்து 2,09,906-ஆக காணப்பட்டது. மேலும், ஸ்கூட்டர்கள் விற்பனை 83,638-லிருந்து 9 சதவீதம் அதிகரித்து 91,480-ஆக இருந்தது. 
  இவை தவிர, மோட்டார் சைக்கிள் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 1,07,189-ஆகவும், மூன்று சக்கர வாகன விற்பனை 37 சதவீதம் உயர்ந்து 12,686-ஆகவும் காணப்பட்டன.
  டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி டிசம்பர் மாதத்தில் 47,818 என்ற எண்ணிக்கையிலிருந்து 26 சதவீதம் வளர்ச்சி கண்டு 60,262-ஆக இருந்தது. இருசக்கர வாகன ஏற்றுமதி 39,852 என்ற எண்ணிக்கையிலிருந்து 22 சதவீதம் உயர்ந்து 48,803-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டார் அந்த
  அறிக்கையில் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai