கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.700 கோடி திரட்டுகிறது ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ்

கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.700 கோடி திரட்டவுள்ளதாக ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.
கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.700 கோடி திரட்டுகிறது ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ்


கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.700 கோடி திரட்டவுள்ளதாக ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியதாவது:
வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் முற்றிலும் பாதுகாப்பான மீட்ககூடிய வகையிலான பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.700 கோடி திரட்டவுள்ளது. வெளியிடப்படவுள்ள ஒவ்வொரு கடன்பத்திரங்களின் முகமதிப்பு தலா ரூ.1,000 ரூபாயாகும்.
மூன்று கட்டடங்களாக இக்கடன்பத்திர வெளியீட்டை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ரூ.200 கோடிக்கும், வரவேற்பு அதிகரிக்கும்பட்சத்தில் மேலும் ரூ.500 கோடிக்கும் கடன்பத்திரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள இக்கடன்பத்திர வெளியீடு ஜனவரி 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
3, 5 மற்றும் 10 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டதாக இக்கடன்பத்திரங்கள் இருக்கும். முதலீட்டாளர்கள் மாதாந்திர, ஆண்டு அல்லது ஒட்டுமொத்தமாக வருவாயைப் பெறும் வகையில் இக்கடன்பத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் கடன்பத்திரங்களை பட்டியலிடவும் பரிந்துரைக்கப்படும் என்று ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com