
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளதால் பிண்ணாக்கு ஏற்றுமதி 78 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் செயல் இயக்குநர் பி.வி.மேத்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு ஈரான் மிகப் பெரிய சந்தையாக உள்ளது. ஆனால், தற்போது அந்த நாட்டின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஏற்றுமதி அளவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை வரும் மாதங்களிலும் தொடரும்.
கடந்தாண்டு மே மாதத்தில் 2,63,644 டன் பிண்ணாக்கு ஏற்றுமதி செய்திருந்த நிலையில், நடப்பாண்டில் இதே கால அளவில் ஏற்றுமதி 78 சதவீதம் சரிந்து வெறும் 58,549 டன்னாகியுள்ளது என்றார் அவர்.