மும்பை, தேசியப் பங்கு சந்தைகள் சரிவு

சர்வதேச அளவில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை, தேசியப் பங்கு சந்தைகள் சரிவு


சர்வதேச அளவில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
திங்கள்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை, மாலையில் 71.53 புள்ளிகள் சரிவடைந்து, 39,122.96 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 24.45 புள்ளிகள் சரிவடைந்து 11,699.65 புள்ளிகளாக நிலைப்பெற்றது. இருப்பினும், நண்பகல் நேரத்தில் தேசியப் பங்குச் சந்தை  குறியீட்டு எண் 11,670.22-இல் இருந்து 11,754  வரை அதிகரித்துக் காணப்பட்டது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், எண்ணெய் உற்பத்தி, உலோகம், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், வேதாந்தா குழுமம், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்தன.
இருப்பினும், யெஸ் பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கல்சடன்சி, பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை 2.19 சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை 23 காசுகள் அதிகரித்து, ரூ.69.35 காசுகளாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com