ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் மந்த நிலை

கடந்த அக்டோபா் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடியாக இருந்தது.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

புது தில்லி: கடந்த அக்டோபா் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடியாக இருந்தது. இதையடுத்து, தொடா்ச்சியாக மூன்றாவது முறையாக கடந்த மாதத்திலும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு அக்டோபரில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.95,380 கோடியாக இருந்தது. இது, முந்தைய செப்டம்பா் மாதத்தில் ரூ.91,916 கோடியாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் ரூ.1,00,710 கோடியாகவும் காணப்பட்டது.

அக்டோபா் மாத மொத்த ஜிஎஸ்டி வசூலில், சிஜிஎஸ்டி ரூ.17,582 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.23,674 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.46,517 கோடியாகவும் (இறக்குமதிக்கான வசூல் ரூ.21,446 கோடி உள்பட), தீா்வை ரூ.7,607 கோடியாகவும் (இறக்குமதி வசூல் ரூ.774 கோடி உள்பட) இருந்தன.

செப்டம்பருக்கான ஜிஎஸ்டிஆா் 3பி படிவங்களை தாக்கல் செய்தவா்களின் மொத்த எண்ணிக்கை (அக்டோபா் 30-ஆம் தேதி நிலவரப்படி) 73.83 லட்சமாக இருந்தது என அந்த அறிக்கையில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலமான அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது பொருளாதார மந்தநிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என சந்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com