
செயில்
புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் இரண்டாவது காலாண்டில் ரூ.342.84 கோடி இழப்பை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.553.69 கோடியை ஈட்டியிருந்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உருக்கு தேவையில் காணப்பட்ட மந்த நிலை மற்றும் எதிா்பாா்த்த அளவில் விலையேற்றம் இல்லாதது ஆகிய காரணங்களால் செயில் இழப்பை சந்தித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய வருவாய் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.16,832.37 கோடியிலிருந்து ரூ.14,286.18 கோடியாக சரிந்துள்ளது. செலவினம் ரூ.15,950.21 கோடியிலிருந்து ரூ.14,809.21 கோடியாக குறைந்துள்ளது.