வீட்டு வசதிக் கடன்களை ஆண்டுக்கு 8.20 சதவீதம் என்ற விகிதத்தில் பெறலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித பரிந்துரையின் தொடர்ச்சியாக இந்தியன் வங்கியின் வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 4-ஆம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது வீட்டு வசதிக் கடன்களை ஆண்டுக்கு 8.20 சதவீதம் என்னும் வட்டி விகிதத்திலே பெறலாம். இது சந்தையில் விளங்கும் மிகக்குறைந்த வட்டி விகிதமாகும். இதைப்போல, வாகனக் கடன்களை ரெப்போ விகித முறையின் கீழ் ஆண்டுக்கு 8.85 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுவும் சந்தையில் விளங்கும் மிகக்குறைந்த வட்டி விகிதமாகும்.
சிறப்பு அம்சங்கள்: வீட்டுவசதிக் கடனைப் பொருத்தவரை, அதிகப்படியான திரும்பச் செலுத்துதலுக்கான கால வரையறை 30 ஆண்டுகள், அதிகபட்ச உச்சவரம்பு இல்லை. 2020-ஆம் ஆண்டு ஜனவரி 31 -ஆம்தேதி வரை விண்ணப்ப பரிசீலனை கட்டணம் கிடையாது. வாகனக் கடனைப் பொருத்தவரை, புதிய நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு மட்டுமே இந்த வட்டி விகிதம் பொருந்தும். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். திரும்பச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால வரையறை 84 மாதங்கள். இந்தத் தகவல் இந்தியன் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



