
புதிய கார்களின் விற்பனை வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ள போதிலும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை நடப்பாண்டில் 10 சதவீத அளவுக்கு வளர்ச்சி காணும் என ஓஎல்எக்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டு சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை கடந்த 2018இல் 40 லட்சமாக இருந்தது. இது, நடப்பு 2019ஆம் ஆண்டில் 44 லட்சமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் விற்பனை வரும் 2020ஆம் ஆண்டில் 50 லட்சமாகவும், 2023ஆம் ஆண்டில் 66 லட்சமாகவும் அதிகரிக்கும்.
பயன்படுத்தப்பட்ட கார் சந்தையின் மதிப்பு தற்போதைய நிலையில் 1,400 கோடி டாலராக உள்ளது. இச்சந்தையின் மதிப்பு வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 2,500 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஓஎல்எக்ஸ் அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.