5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைய 12 சதவீத வங்கி கடன் வளர்ச்சி அவசியம்: எஸ்பிஐ

மத்திய அரசின் இலக்கான 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு ஆண்டுதோறும் 12 சதவீத வங்கி கடன் வளர்ச்சி அவசியம் என பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் தினேஷ் குமார் கரா
5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைய 12 சதவீத வங்கி கடன் வளர்ச்சி அவசியம்: எஸ்பிஐ

மத்திய அரசின் இலக்கான 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு ஆண்டுதோறும் 12 சதவீத வங்கி கடன் வளர்ச்சி அவசியம் என பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் தினேஷ் குமார் கரா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: அடுத்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டுவது மத்திய அரசின் கனவாக உள்ளது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் வழங்கும் கடன் நடவடிக்கைகள் 12 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம். அப்போதுதான், மத்திய அரசின் கனவு நனவாகும். தற்போது வங்கிகளின் கடன் வழங்கல் அளவானது ரூ.98 லட்சம் கோடியாக உள்ளது. 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்குக்கு வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகளும் பெரிதும் கைகொடுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com