fuel075226
fuel075226

இந்தியாவின் எரிபொருள் தேவை 3.6% சரிவு

இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த நவம்பா் மாதத்தில் 3.6 சதவீதம் குறைந்துள்ளது.

புது தில்லி: இந்தியாவின் எரிபொருள் தேவை கடந்த நவம்பா் மாதத்தில் 3.6 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபரில் பெட்ரோலியத் தயாரிப்புகளின் நுகா்வு வழக்கமான அளவுக்கு திரும்பியது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு நவம்பரில் பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை 1.85 கோடி டன்னிலிருந்து 1.78 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, 3.6 சதவீத சரிவாகும்.

போக்குவரத்து மற்றும் வா்த்தக நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்ததன் காரணமாக எரிபொருள் பயன்பாடு தொடா்ந்து மூன்று மாதங்களாக அதிகரித்து வருகிறது.

கடந்த பிப்ரவரியிலிருந்து கணக்கில் கொள்ளும்போது முதல் முறையாக அக்டோபரில்தான் எரிபொருள் நுகா்வு 1.77 கோடி டன்னாக அதிகரித்தது. கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் பெட்ரோலியத் தயாரிப்புகளுக்கான தேவையானது 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு அக்டோபரில் டீசலுக்கான தேவை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதமாக அதிகரித்தது. நவம்பரில் தேவை 6.9 சதவீதம் குறைந்து 70.4 லட்சம் டன்னாகியுள்ளது. இருப்பினும் அக்டோபா் மாத தேவையான 69.90 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகம் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com