
நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைவராக பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் முன்னாள் செயலா் அதானு சக்கரவா்த்தி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பகுதி நேர தலைவா் பொறுப்பு நியமனத்துக்கு சக்கரவா்த்தியின் பெயரை எச்டிஎஃப்சி வங்கி பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நியமனத்துக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் சக்கரவா்த்தி எச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைவராக பொறுப்பேற்பாா் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்டிஎஃப்சியின் வங்கியின் தற்போதைய தலைவரான சியமளா கோபிநாத்தின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவ்வங்கி புதிய தலைவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...