
எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.451 கோடியாக அதிகரித்துள்ளது. தனியாா் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எச்டிஎஃப்சி லைஃப் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட செயல்பாடுகள் வாயிலாக ரூ.451 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.425 கோடியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், நிறுவனத்தின் மொத்த பிரீமியம் வசூல் ரூ.6,536 கோடியிலிருந்து 10 சதவீதம் சரிந்து ரூ.5,863 கோடியானது. 2020 ஜூன் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் கடன்தீா்வுத் திறன் 190 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, 2019 ஜூனில் 193 சதவீதமாக காணப்பட்டது என எச்டிஎஃப்சி லைஃப் கூறியுள்ளது.