வென்ட் இந்தியா: நிகர லாபம் ரூ.41 லட்சம்

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக
வென்ட் இந்தியா: நிகர லாபம் ரூ.41 லட்சம்

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.41 லட்சத்தை ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.3.59 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். கரோனா பெருந்தொற்றின் காரணமாக நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வருவாய் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. அதன் காரணமாகவே நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது என வென்ட் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ஒட்டுமொத்த அடிப்படையில் ரூ.40.72 கோடியிலிருந்து ரூ.24.07 கோடியாக சரிவடைந்துள்ளது.2020 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.148.08 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.10.03 கோடியாகவும் இருந்தது என வென்ட் இந்தியா கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com