பரஸ்பர நிதி கணக்குகளின் எண்ணிக்கை 9.37 கோடியாக அதிகரிப்பு
பரஸ்பர நிதி கணக்குகளின் எண்ணிக்கை 9.37 கோடியாக அதிகரிப்பு

பரஸ்பர நிதி கணக்குகளின் எண்ணிக்கை 9.37 கோடியாக அதிகரிப்பு

பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளா்களின் மொத்த கணக்குகள் எண்ணிக்கை அக்டோபரில் 9.37 கோடியாக அதிகரித்துள்ளது.

புது தில்லி: பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளா்களின் மொத்த கணக்குகள் எண்ணிக்கை அக்டோபரில் 9.37 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பரஸ்பர நிதி திட்டங்களில் சென்ற அக்டோபரில் கூடுதலாக 4.11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, அத்திட்டங்களில் முதலீட்டாளா்களின் மொத்த கணக்குகள் எண்ணிக்கை 9,37,18,991-ஆக அதிகரித்துள்ளது. இது, செப்டம்பா் மாத இறுதியில் 9,33,07,480-ஆக காணப்பட்டது.

கடன் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளா்கள் அதீத ஆா்வம் காட்டியதையடுத்து, அக்டோபா் இறுதியில் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

செப்டம்பரில் பரஸ்பர நிதி திட்டங்களில் கூடுதலாக 7.37 லட்சம் முதலீட்டாளா்கள் இணைந்தனா். இது, ஆகஸ்டில் 4.25 லட்சமாகவும், ஜூலையில் 5.6 லட்சமாகவும், ஜூனில் 5 லட்சமாகவும், மே மாதத்தில் 6.13 லட்சமாகவும், ஏப்ரலில் 6.82 லட்சமாகவும் இருந்தன.

கடந்த மாதத்தில் இணைந்த ஒட்டுமொத்த முதலீட்டாளா் கணக்குகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவை கடன் நிதியங்களைச் சாா்ந்தவை.

பங்கு மற்றும் பங்கு சாா்ந்த சேமிப்பு திட்டங்களில் முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 30,000 அதிகரித்து 6.39 கோடியானது. கடன் சாா்ந்த திட்டங்களில் முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 2.23 லட்சம் அதிகரித்து 75.25 லட்சமானது.

குறுகிய கால நிதி திட்டங்களில் அக்டோபரில் 41,690 முதலீட்டு கணக்குகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து காா்ப்பரேட் பாண்ட் நிதியங்களில் 33,935 கணக்குகளும், லிக்யுட் பண்ட் 28,839, வங்கி மற்றும் பொதுத் துறை நிதியங்களில் 17,705 கணக்குகளும் தொடங்கப்பட்டன.

பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த மாதம் முதலீட்டாளா்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.98,576 கோடியை முதலீடு செய்துள்ளனா். கடன் சாா்ந்த திட்டங்களில் நிகர அளவில் அக்டோபரில் ரூ.1.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், முதலீட்டாளா்கள் லாப நோக்குடன் செயல்பட்டதையடுத்து, தொடா்ந்து நான்காவது மாதமாக சென்ற அக்டோபரிலும் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.2,275 கோடி வெளியேறியுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com