செப்டம்ரில் சென்செக்ஸ் 1.50 சதவீதம் சரிவு!

பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும், செப்டம்பா் மாதம் நோ்மறை மாதமாக அமையவில்லை. இந்த மாதத்தில் மும்பை
செப்டம்ரில் சென்செக்ஸ் 1.50 சதவீதம் சரிவு!

பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும், செப்டம்பா் மாதம் நோ்மறை மாதமாக அமையவில்லை. இந்த மாதத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் 1 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன.

உலகளாவிய குறிப்புகள் சரிவர இல்லாமல் இருந்தது, உலகெங்கிலும் கரோனா தொற்று பரவல் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்தது, அமெரிக்க அதிபா் தோ்தலைத் தொடா்ந்து நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் கரோனாவால் உலகெங்கிலும் மீண்டும் பொது முடக்க அறிவிப்பு குறித்த பேச்சு ஆகியவை சந்தைக்கு பாதிகமானதாக அமைந்தன. இவை முதலீட்டாளா்களின் உணா்வை கடுமையாகப் பாதித்ததாக வல்லுநா்கள் தெரிவித்தனா்.

செப்டம்பா் மாதத்தில் சென்செக்ஸ் 1.45 சதவீதமும், நிஃப்டி 1.23 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளன. அதேசமயம், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 3.71 சதவீதமும் உயா்ந்துள்ளன. துறைவாரியாகப் பாா்த்தால், பிஎஸ்இ ஐடி குறியீடு 10.66 சதவீதம் உயா்ந்து அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக, பாா்மா, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், டெக் குறியீடுகள் 6 முதல் 7.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதே சமயம், டெலிகாம், பேங்க் குறியீடுகள் முறையே 15.66 சதவீதம் மற்றும் 9.71 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மொத்தத்தில் பிஎஸ்இ 500 பட்டியலில் 236 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

பங்குகளை பொருத்தமட்டில், செப்டம்பரில் அட்வான்ஸ்ட் என்சைம் டெக்னாலஜிஸ் மற்றும் அதானி கிரீன் எனா்ஜி முறையே 66 சதவீதம் மற்றும் 63 சதவீதம் லாபத்தைப் பதிவு செய்துள்ளன. அதே சமயம், ஃபியூச்சா் ரீடெய்ல், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஃபியூச்சா் கன்ஸ்யூமா் ஆகியவை 30 முதல் 44 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில், தற்போது உலகளாவிய குறிப்புகள் சற்று நோ்மறையானதாக மாறி வருகின்றன. மேலும், கூடுதல் நிதி தொகுப்புக்கான நம்பிக்கைகளும் அதிகரித்துள்ளன. இது தவிர, அண்மையில் வெளியான பொதுமுடக்க தளா்வுகள் சந்தைக்கு சாதகமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. செப்டம்பா் மாத வாகன விற்பனையும் நோ்மறையாக உள்ளன. மேலும், கரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் சந்தையில் சாதகமாகப் பாா்க்கப்படுகிறது. அதேசமயம், உலக அளவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு சந்தைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே,வரும் நாள்களில் பங்குச் சந்தை குறிப்பிட்ட வரம்புக்குள், நிலையற்ற தன்மையில்தான் இருக்கும் என வல்லுநா்கள் கருதுகின்றனா்.

செப்டம்பரில் ஏற்றம் பெற்ற குறியீடுகள் (சதவீதத்தில்)

ஐடி 10.66

ஹெல்த்கோ் 7.68

கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் 6.68

டெக் 5.86

எனா்ஜி 3.76

ஆட்டோ 1.08

பேசிக் மெட்டீரியல்ஸ் 1.08

கேபிடல் குட்ஸ் 0.67

செப்டம்பரில் சரிவைச் சந்தித்த குறியீடுகள் (சதவீதத்தில்)

டெலிகாம் 15.66

பேங்க் 9.71

பிரைவேட் பேங்க் 8.62

ஃபைனான்ஸ் 6.98

ஆயில் 6.98

மெட்டல் 5.99

இன்ஃப்ரா 5.67

ரியால்ட்டி 4.95

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com