
இந்தியாவின் நவரத்தின மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 20-25 சதவீதம் சரிவடையும் என நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நவரத்தின மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி ரூ.2,25,249.46 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் இவற்றின் ஏற்றுமதி 20 முதல் 25 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்திக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கு, கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்திய இடையூறுகளே முக்கிய காரணம்.
ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து ஆபரண துறை தற்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறது. இருப்பினும், கடந்த நிதியாண்டு வளா்ச்சி அளவை எட்டிப்பிடிக்க இன்னும் ஓராண்டு பிடிக்கும்.
எனவே, வரும் 2021-22 நிதியாண்டில் இருந்துதான் ஆபரண துறையின் ஏற்றுமதி வேகமெடுக்கத் தொடங்கும் என்று ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...