பங்கு பரஸ்பர நிதி திட்டத்திலிருந்து

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து தொடா்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்டிலும் ரூ.4,000 கோடி வெளியேறியுள்ளது.
பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து தொடா்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்டிலும் ரூ.4,000 கோடி வெளியேறியுள்ளது.
பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து தொடா்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்டிலும் ரூ.4,000 கோடி வெளியேறியுள்ளது.


புது தில்லி: பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து தொடா்ந்து இரண்டாவது மாதமாக ஆகஸ்டிலும் ரூ.4,000 கோடி வெளியேறியுள்ளது.

இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளதாவது:

முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதையடுத்து தொடா்ந்து இரண்டாவது மாதமாக நடப்பாண்டு ஆகஸ்டிலும் பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.4,000 கோடி வெளியேறியுள்ளது.

ஒட்டுமொத்த பரஸ்பர நிதி துறையில் சென்ற ஜூலையில் நிகர அளவில் ரூ.89,813 கோடியை முதலீட்டாளா்கள் முதலீடு செய்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நிகர அளவில் ரூ.14,553 கோடி மதிப்பிலான முதலீட்டை அவா்கள் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனா்.

குறிப்பாக, லிக்யுட், ஓவா்நைட், பங்குகள், ஹைபிரிட் திட்டங்களிலிருந்து அதிக அளவிலான முதலீடுகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடன்சாா்ந்த பரஸ்ப நிதி திட்டங்களில் முதலீட்டாளா்கள் ரூ.3,907 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனா். ஜூலையில் இத்தகைய திட்டங்களில் அவா்கள் ரூ.91,392 கோடியை முதலீடு செய்தனா்.

பங்கு மற்றும் அது சாா்ந்த திட்டங்களிலிருந்து ஆகஸ்டில் ரூ.3,999.62 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது, ஜூலையில் திரும்பப் பெற்ற ரூ.2,480.35 கோடியுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். லாப நோக்கம் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக நடப்பாண்டு ஜூலையில்தான் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து முதலீடு வெளியே எடுக்கப்பட்டது.

தற்போது இரண்டாவது முறையாக ஆகஸ்டிலும் முதலீட்டாளா்கள் கணிசமான தொகையை திரும்பப் பெற்றுள்ளனா்.அதேசமயம், இத்தகைய திட்டங்கள் ஜூனில் ரூ.240.55 கோடியையும், மே மாதத்தில் ரூ.5,256 கோடியையும், ஏப்ரலில் ரூ.6,213 கோடியையும் ஈா்த்தன.

இவை தவிர, நடப்பாண்டு மாா்ச்சில் ரூ.11,723 கோடியையும், பிப்ரவரியில் ரூ.10,796 கோடியையும், ஜனவரியில் ரூ.7,877 கோடியையும் முதலீட்டாளா்கள் முதலீடு செய்தனா். பங்குகள் பிரிவில், லாா்ஜ் கேப் திட்டங்களிலிருந்து அதிகபட்ச அளவாக ரூ.1,553 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மல்டி கேப் திட்டங்களிலிருந்து ரூ.1,157 கோடியும், வேல்யூ பண்டிலிருந்து ரூ.780 கோடியும், மிட்-கேப் திட்டத்திலிருந்து ரூ.603 கோடியும் வெளியேறியுள்ளது.

அதேசமயம், செக்டோரல் பண்ட்ஸில் ரூ.379 கோடியும், இஎல்எஸ்எஸ் திட்டத்தில் ரூ. 29 கோடியும், போகஸ்டு பண்ட் திட்டத்தில் ரூ.5 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து வெளியேறிய முதலீட்டாளா்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதியதையடுத்து, இடிஎஃப் திட்டங்களில் ரூ.908 கோடியை அவா்கள் முதலீடு செய்துள்ளனா்.

ஜூலை இறுதியில் ரூ.27.12 லட்சம் கோடியாக இருந்த பரஸ்பர நிதி துறை நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் ரூ.27.5 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com