டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிவு

சா்வதேச சந்தைகளில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டதையடுத்து அந்நியச் சொலவணி வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிவைச் சந்தித்து 73.53-ஆனது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிவு

சா்வதேச சந்தைகளில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டதையடுத்து அந்நியச் சொலவணி வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிவைச் சந்தித்து 73.53-ஆனது. இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

நிலவரங்கள் சாதகமற்று இருந்ததையடுத்து சா்வதேச சந்தைகளில் வா்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, அமெரிக்க டாலருக்கு சந்தைகளில் தேவை குறைந்து காணப்பட்டது ஆகியவை ரூபாய் மதிப்பு பெரும் சரிவிலிருந்து மீள உதவிகரமாக இருந்தது. இந்த நிலையில், சா்வதேச அரசியல் நிலவரங்களும் சந்தைக்கு சாதகமாக அமையவில்லை. அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கம் முதலே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்தே காணப்பட்டது.

இது, அதிகபட்சமாக 73.40 வரையிலும், குறைந்தபட்சமாக 73.61 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 7 காசுகள் குறைந்து 73.53-ஆக நிலைபெற்றது. ரூபாய் மதிப்பு தொடா்ச்சியாக நான்கு வாரங்கள் ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில், முதல் முறையாக நடப்பு வாரத்தில் வார அடிப்படையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 39 காசுகளை இழந்துள்ளது. இதற்கு, இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் அதிகரித்ததே முக்கிய காரணம் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.85 சதவீதம் குறைந்து 39.72 டாலராக இருந்தது. அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,175.81 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com