'ஃபோல்டபிள்' ஸ்மார்ட்போன்களின் விலையை வெளியிட்ட சாம்சங் நிறுவனம்

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம்  தன்னுடைய புதிய வரவான மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கேலக்சி இசட் போல்ட் 3 5-ஜி மற்றும் கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுகிறார்கள் 
'ஃபோல்டபிள்' ஸ்மார்ட்போன்களின் விலையை வெளியிட்ட சாம்சங் நிறுவனம்
'ஃபோல்டபிள்' ஸ்மார்ட்போன்களின் விலையை வெளியிட்ட சாம்சங் நிறுவனம்

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம்  தன்னுடைய புதிய வரவான மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கேலக்சி இசட் போல்ட் 3 5-ஜி மற்றும் கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுகிறார்கள் . 

கடந்த வாரம் இந்திய பொருளாதார நிலைக்கு தகுந்தது போல சரியான விலையை பின்னர் அறிவிப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்திருந்தனர். தற்போது மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களின் விலையை அறிவித்திருக்கிறார்கள்.

கேலக்ஸி இசட் போல்ட் 3 , 5-ஜி   -  7.6 இன்ச் அளவுள்ள இன்பினிட்டி தொடுதிரை உடன் 12 ஜிபி உள்ளக நினைவகமும் , 512 ஜிபி கூடுதல் சேமிப்புத் திறனுடனும்  12 எம்பி, 10 எம்பி மற்றும் 4 எம்பி கொண்ட மூன்று கேமரா அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது . பாட்டரி சேமிப்பின் அளவு 4400ஆம்ப் கொண்ட இந்த சாதனத்தின் முன்பதிவு விலை ரூ.1,42,999  . சந்தைக்கு வந்த பின் 12+256 ஜிபி கொண்ட சாதனம் 1,49,999  என்றும்  12+512 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை  ரூ.1,57,999 எனவும்  நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி - இரண்டு விதமாக வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றில்  8 ஜிபி உள்ளக நினைவகமும் 256 ஜிபி கூடுதல் சேமிப்புத் திறனுடனும் மற்றொன்றில் 8 ஜிபி உள்ளக நினைவகமும் 128 ஜிபி கூடுதல் சேமிப்பு வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10 எம்பி பின் பக்கமாகவும் 4 எம்பி முன் பக்கமாகவும் இரண்டு கேமராக்களை  பொருத்தியிருக்கிறார்கள். பாட்டரி சேமிப்பின் அளவு 3,300 ஆம்ப் கொண்ட இந்த சாதனத்தின் முன்பதிவு  விலை ரூ.77,999 . இதிலும் 12+128 ஜிபி ரூ.84,999 ஆகவும்  12+256 ஜிபி திறன் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் எச்டிஎப்ஸ் வங்கிக்கணக்கின் மூலம் வாங்கினால் 7,000 வரை தள்ளுபடி செய்வதாகவும் மேலும் 7000 செலுத்தினால்  ஓராண்டிற்கு ஸ்மார்போன்களுக்கு காப்பீடு திட்டமும் செய்து தரப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்..

ஆகஸ்ட் 24 ஆம் தேதிவரை முன்பதிவு விலையே தொடரும் என்றும் அதற்கு பின்  வருகிற செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நிர்ணையித்த விலையே தொடரும் என சாம்சங் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com