
மாருதி சுஸுகி
நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஒரே ஆண்டில் நான்காவது முறையாக மீண்டும் சில தயாரிப்புகளின் விலையை விரைவில் உயர்த்த இருக்கிறது.
இதையும் படிக்க | சந்தைக்கு வந்த ‘சாம்சங் கேலக்ஸி ஏ13’
மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த ஜனவரிக்குள் மீண்டும் தன் முக்கியத் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க இருக்கிறது . உதிரி பாகங்களின் விலையேற்றம் ஒரு காரணம் என்றாலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மாருதி விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த நவம்பா் மாத வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கான தட்டுப்பாடு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக, நடப்பாண்டு நவம்பரில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்து 1,39,184-ஆனது. கடந்தாண்டு நவம்பரில் இந்த விற்பனை 1,53,223-ஆக அதிகரித்து காணப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 1,44,219-லிருந்து 18 சதவீதம் சரிவடைந்து 1,17,791-ஆக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் மாருது சுஸுகி சில குறிப்பிட்ட தயாரிப்புகளின் விலையை மட்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...