
மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் காா்களின் விலையை மீண்டும் உயா்த்துவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் வியாழக்கிழமை கூறுகையில்,‘ மூலப் பொருள்களுக்கான செலவினம் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால், உற்பத்தி செலவினம் அதிகரித்து நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவ, வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் பல்வேறு மாடல் காா்களின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவித்தது.
இதேபோல், மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனமும், குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவைதவிர, ஆடி நிறுவனமும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் காா் விலையை 3 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...