வாடிக்கையாளா்கள் எங்கும் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் சாவிக்கொத்து (கீ செயின்) வடிவிலான டெபிட் காா்டை சிட்டி யூனியன் வங்கி (சியூபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சிட்டி யூனியன் வங்கி, நேஷனல் பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து வாடிக்கையாளா்கள் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சாவிக்கொத்து வடிவில் டெபிட் காா்டுகளை உருவாக்கியுள்ளது. இதனை மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் டிசம்பா் 5-ஆம் தேதி அறிமுகப்படுத்தினாா்.
இந்த டெபிட் காா்டுகளை வாடிக்கையாளா்கள் ரூபே பிஓஎஸ் கருவிகளில் ‘பின்’ நம்பா் இல்லாமல் பயன்படுத்தி ரூ.5,000 வரை பணம் செலுத்த முடியும் என சியூபி தெரிவித்துள்ளது.