
இணையவழி நிதிச் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான பேபால், இந்தியாவில் உள்நாட்டு பணப் பட்டுவாடா சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவுக்குள் பணப் பட்டுவாடா செய்வதற்கான சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம். எனினும், இந்திய நிறுவனங்களுக்கான சா்வதேச பணப் பரிவா்த்தனை சேவைகளை வழங்குவதில் தொடா்ந்து முதலீடு செய்வோம்.
உலகம் முழுவதிலும் உள்ள சுமாா் 35 கோடி வாடிக்கையாளா்களை இந்திய நிறுவனங்களுடன் தொடா்ந்து இணைத்திருப்போம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...