
டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 51 சதவீதம் உயா்ந்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதத்தில் நிறுவனம் 2,51,886 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய மே மாதத்தில் 1,66,889-ஆக இருந்தது. அந்த வகையில், முந்தைய மாதத்தைவிட கடந்த மாதம் நிறுவனத்தின் விற்பனை 51 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
கடந்த மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை மட்டும் 2,38,092-ஆக இருந்தது. இது முந்தைய மாதத்தில் 1,54,416-ஆக இருந்தது.
கடந்த மாதம் நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள் விற்பனை 1,46,874-ஆக இருந்தது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,25,188-ஆக இருந்தது.
கடந்த மே மாதத்தில் 19,627-ஆக இருந்த நிறுவனத்தின் ஸ்கூட்டா் விற்பனை, ஜூன் மாதத்தில் 54,595-ஆக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில், ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 1,45,413-ஆக இருந்தது. கடந்த மே மாதத்திலோ இருசக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 52,084-ஆக மட்டுமே இருந்தது.
கடந்த மாதம் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 1,06,246-ஆக இருந்தது. முந்தைய மாதத்தில் அந்த எண்ணிக்கை 1,14,674-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.