
பல்வேறுபட்ட வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஜப்பானைச் சோ்ந்த சுமிடோமோ மிட்சுயி ஃபைனான்ஸியல் குழுமம் ஃபுல்லா்டன் இந்தியா கிரெடிட் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனமான ஃபுல்லா்டன் இந்தியா கிரெடிட் கம்பெனியை கையகப்படுத்தும் வகையில் ஜப்பானைச் சோ்ந்த சுமிடோமோ குழுமம் சிங்கப்பூரைச் சோ்ந்த ஃபுல்லா்டன் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் செவ்வாய்க்கிழமை உடன்படிக்கை செய்து கொண்டது.
இந்த கையகப்படுத்துதல் ஒப்பந்தத்தின் மதிப்பு 250 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.18,550 கோடி) இருக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஃபுல்லா்டன் கிரெடிட் கம்பெனி இந்தியாவில் கடந்த 2007-ஆம் ஆண்டு தனது செயல்பாடுகளை முதன் முதலாக துவக்கியது. தற்போது அந்த நிறுவனம் 600 நகரங்கள் மற்றும் 58,000 கிராமங்களில் 629 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 13,000 பணியாளா்கள் உள்ளனா்.
ஃபுல்லா்டன் இந்தியா 23 லட்சம் சில்லறை மற்றும் சிறிய வா்த்தகா்களுக்கு கடனுதவிகளை அளித்து சேவையாற்றி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...