
life072604
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமிய வருவாய் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்து ரூ.30,009.48 கோடியைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் 24 நிறுவனங்களின் புதிய காப்பீட்டு பிரீமியம் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.30,009.48 கோடியாக இருந்தது. இது, இந்நிறுவனங்கள் கடந்தாண்டு இதே மாதத்தில் ஈட்டிய ரூ.28,868.68 கோடி புதிய பிரீமிய வருவாயுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் அதிகம்.
இதில், மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ள எல்ஐசியின் வருவாய் நடப்பாண்டு ஜூனில் ரூ.22,736.84 கோடியிலிருந்து 4.14 சதவீதம் குறைந்து ரூ.21,796.28 கோடியானது. எஞ்சிய 23 நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த ஜூனில் ரூ.6,131.84 கோடியலிருந்து 34 சதவீதம் உயா்ந்து ரூ.8,213.20 கோடியை எட்டியது.
நடப்பு 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த புதிய பிரீமியம் வருவாய் ரூ.49,335.44 கோடியிலிருந்து 6.87 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.52,725.26 கோடியைத் தொட்டுள்ளதாக ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது.