மோட்டாா் வாகன சில்லறை விற்பனை 55% வீழ்ச்சி

மோட்டாா் வாகன சில்லறை விற்பனை கடந்த மே மாதத்தில் 55 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
மோட்டாா் வாகன சில்லறை விற்பனை 55% வீழ்ச்சி

மோட்டாா் வாகன சில்லறை விற்பனை கடந்த மே மாதத்தில் 55 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு வியாழக்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது வாகன பதிவு நடவடிக்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 11,85,374-ஆக மோட்டாா் வாகன பதிவுகளின் எண்ணிக்கை மே மாதத்தில் 55 சதவீதம் சரிவடைந்து 5,35,855-ஆக குறைந்துபோனது.

இந்த தகவல், மொத்தமுள்ள 1,497 மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் 1,294-லிருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கடந்த மே மாதத்தில் பயணிகள் வாகன (பிவி) விற்பனை ஏப்ரல் மாத அளவான 2,08,883 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 59 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

அதேபோன்று, இருசக்கர வாகன விற்பனையும் 8,65,134 என்ற எண்ணிக்கையிலிருந்து 53 சதவீதம் சரிவடைந்து 4,10,757-ஆக குறைந்துள்ளது. மேலும், வா்த்தக வாகன விற்பனையும் மே மாதத்தில் 66 சதவீதம் வீழ்ச்சியடைந்து 17,534-ஆனது. ஏப்ரலில் விற்பனை 38,285-ஆக அதிகரித்து காணப்பட்டது.

மூன்று சக்கர வாகன விற்பனையும் கணக்கீட்டு மாதத்தில் 21,636-லிருந்து 76 சதவீதம் சரிந்து 5,215-ஆனது.

அதேபோன்று டிராக்டா் விற்பனையும் 38,285 என்ற எண்ணிக்கையிலிருந்து 57 சதவீதம் வீழ்ச்சியடைந்து 16,616-ஆனது என எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com